/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வங்கி அதிகாரியை தாக்கிய அ.தி.மு.க., நிர்வாகி கைது
/
வங்கி அதிகாரியை தாக்கிய அ.தி.மு.க., நிர்வாகி கைது
ADDED : அக் 25, 2025 01:06 AM
சேலம், சேலம், வீராணம், பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 53. அ.தி.மு.க.,வில், அயோத்தியாப்பட்டணம் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை துணை செயலராக உள்ளார். இவரது மகன் ரஞ்சித்குமார், 28. இருவரும் வீராணம் அருகே, டி.பெருமாபாளையத்தில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி கிளையில், கால்நடை கடன், 80,000 ரூபாய் வாங்கி இருந்தனர்.
கடனை கட்டாமல் இருந்ததால், மாதேஸ்வரனுக்கு, வங்கி சார்பில், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டிருந்தது. ஆனாலும் காலம் தாழ்த்தினர்.
இந்நிலையில் வங்கி மண்டல அலுவலர் பாலாஜி, காசாளர் கணேஷ், கிளை மேலாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட ஊழியர்கள், நேற்று மதியம், 2:00 மணிக்கு மாதேஸ்வரன் வீட்டுக்கு சென்று, கடன் கட்டாதது குறித்து கேட்டனர். அப்போது மாதேஸ்வரன், அவரது மகன் ரஞ்சித்குமார், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வங்கி ஊழியர்களை தென்னைமட்டை, செங்கலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் புகார்படி, வீராணம் போலீசார், மாதேஸ்வரனை நேற்று கைது செய்து, அவரது மகனிடம் விசாரிக்கின்றனர்.

