தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ எந்த பணிக்கும் நிதி ஒதுக்காத அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,

எந்த பணிக்கும் நிதி ஒதுக்காத அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,

எந்த பணிக்கும் நிதி ஒதுக்காத அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,


ADDED : மார் 05, 2026 05:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: ஆத்துார் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவி நிர்மலாபபிதா தலைமை வகித்தார்.

அதில் நடந்த விவாதம்: வி.சி., கவுன்சிலர் நாராயணன்: அ.தி.மு.க., - பா.ஜ., தெருமுனை கூட்டத்தில், கவுன்சிலரை காணவில்லை. இந்த வார்டுக்கு எதுவும் செய்ய வில்லை என பேசினர். வார்டுக்கு அடிப்படை பணிகளை செய்துள்ளேன்.

இதே வார்டில் வசிக்கும், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், வார்டுக்கு எந்த பணிகளும் மேற்கொள்ள வில்லை. நகர செயலர் மோகன், கோமாளித்தனமாக கூட்டத்தில் பேசியுள்ளார்.

அ.தி.மு.க., கவுன்சிலர் உமாசங்கரி: கட்சி கூட்டத்தில் பேசியதை, நகராட்சி கூட்டத்தில் பேச வேண்டிய அவசியமில்லை. திராணி இருந்தால் நீங்களும் கூட்டம் போட்டு பேசுங்கள்.

உடனே நாராயணன், தி.மு.க., கவுன்சிலர்கள் தங்கவேலு, சாந்தி உள்ளிட்டோர், சிறிது நேரம் வாக்குவாதம் செய்தனர்.

அ.தி.மு.க., கவுன்சிலர் வரத ராஜன்: 16வது வார்டில், 3 ஆண்டுக்கு முன், ஆழ்துளை குழாய் கிணறு, தொட்டி, குழாய் அமைக்கப்பட்டன. இதுவரை தண்ணீர் வினியோகிக்கவில்லை. மேலும் அ.தி.மு.க., வார்டுக்கு அதிக நிதி கொடுத்ததாக பொய் தகவல் கூறுகிறீர்கள். 33 வார்டு

களுக்கும், என்ன திட்டம், எவ்வளவு நிதி என, நகராட்சி சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

கமிஷனர் சையது முஸ்தபா கமால்: தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

மக்கள் நலக்கூட்டணி?

இதனிடையே காங்., கவுன்சிலர் தேவேந்திரன் பேசுகையில், ''2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைமையில் மக்கள் நலக்கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும்,'' என்றார்.

தி.மு.க.,வினர், 'மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி' என கூறி வரும் நிலையில், காங்., கவுன்சிலர், மக்கள் நலக்கூட்டணி ஆட்சிக்கு வரும் என பேசியது, அக்கட்சியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக, 2016 சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமையில், மக்கள் நலக்கூட்டணி அமைத்து, அக்கூட்டணி அனைத்து இடங்களில் தோல்வியை தழுவியது. ஆனால், தி.மு.க., கூட்டணி குறித்தே தெரியாமல், காங்., கவுன்சிலர் பேசியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us