/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அ.தி.மு.க.,வினர் மரியாதை
/
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அ.தி.மு.க.,வினர் மரியாதை
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அ.தி.மு.க.,வினர் மரியாதை
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அ.தி.மு.க.,வினர் மரியாதை
ADDED : டிச 25, 2025 05:11 AM

மேட்டூர: முன்னாள் முதல்வர், எம்.ஜி.ஆர்., 38வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, அ.தி.மு.க.,வின், மேட்டூர் நகர செயலர் சர-வணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள், நேற்று காலை, 10:00 மணிக்கு, பஸ் ஸ்டாண்டில் இருந்து சின்னபார்க் வரை பேரணி-யாக சென்றனர்.
சேலம் மகளிர் அணி மாவட்ட செயலர் லலிதா, ஜெ., பேரவை மாநில துணை செயலர் கலையரசன், அகில உலக எம்.ஜி.ஆர்., பேரவை துணை செயலர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து அப்பகுதியில் வைத்திருந்த எம்.ஜி.ஆர்., படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
இதில் வக்கீல் பிரிவு மாவட்ட செயலர் சித்தன், இணை செயலர் ஜெயகுமார், மருத்துவர் அணி துணை செயலர் சந்திர-மோகன், மாநில அண்ணா தொழிற்சங்க தலைவர் சம்பத், சேலம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலர் நிர்மல் ஆனந்த், பொருளாளர் பான் பிரதாப், 30 வார்டு கிளை செயலர்கள், நக-ராட்சி அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்பட நிர்வாகிகள் ஏராள-மானோர் பங்கேற்றனர்.

