/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இளம்பிள்ளை பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
/
இளம்பிள்ளை பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
இளம்பிள்ளை பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
இளம்பிள்ளை பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 30, 2025 02:23 AM
இளம்பிள்ளை, இளம்பிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட, அ.தி.மு.க.,வை சேர்ந்த 11- வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணன், 8வது- வார்டு கவுன்சிலர் விக்னேஷ் தலைமையில், அடிப்படை வசதிகள் செய்து தராமல் புறக்கணிக்கும் பேருராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, தங்கள் வார்டு பகுதியில் கொசு தொல்லையை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மையினர் மயானத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும். குப்பை கழிவுகளை தினமும் அகற்ற வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும். சாக்கடைகளை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
வீரபாண்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர் வெங்கடேசன் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.