தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அ.தி.மு.க., வாக்குறுதி 'புக்லெட்' பறிமுதல்

அ.தி.மு.க., வாக்குறுதி 'புக்லெட்' பறிமுதல்

அ.தி.மு.க., வாக்குறுதி 'புக்லெட்' பறிமுதல்


ADDED : ஏப் 17, 2026 02:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 17, 2026 02:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்: அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள், 8 பக்க அளவில், 'புக்லெட்' ஆக அச்சடிக்கப்பட்டு, சேலம் மாவட்டம் ஆத்துார் அருகே கீரிப்பட்டியில் நேற்று, மக்களிடம் வழங்கும் பணியில் கட்சியினர் ஈடுபட்டனர். இது சமூக வலைத-ளங்களில் பரவிய நிலையில், ஆத்துார் பறக்கும்படை தேர்தல் அலுவலர் கலாவதி தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது, 100 எண்ணிக்கை கொண்ட புக்லெட்டுகள், சாலையில் கிடந்தன. அவற்றை, தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்து, மல்லியக்கரை போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்கள் விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து போலீசார், அலுவலர்கள் கூறுகையில், 'அ.தி.மு.க.,வினர் சிலர், தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை, புக்லெட் வடிவடிவில் அச்சடித்ததோடு, அதில் காசோலை மாதிரி இடம் பெற்றிருந்தது. இவை தேர்தல் நடத்தை விதிமீறலில் உள்-ளதா என, நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வழக்கு பதியப்படும். தற்போது விசாரணை நடக்கிறது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us