/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செல்வப்பெருந்தகையை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
செல்வப்பெருந்தகையை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
செல்வப்பெருந்தகையை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
செல்வப்பெருந்தகையை கண்டித்து அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 27, 2025 01:28 AM
சேலம், அ.தி.மு.க., பொதுச்செயலர் இ.பி.எஸ்.,சை அவதுாறாக பேசிய, தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகையை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில், மாநகர் அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாநகர் தலைவர் பாலு தலைமை வகித்தார். அதில் அ.தி.மு.க.,வினர், செல்வபெருந்தகையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து மகளிரணியினர், செல்வ பெருந்தகை படத்துக்கு செருப்பு மாலை அணிவித்து, விளக்கு மாறால் நையப்புடைத்து, தீ வைத்து கொளுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். கொள்கை பரப்பு துணை செயலர் வெங்கடாஜலம், மாநகர் அவைத்தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், சக்திவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.