/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அமித்ஷா அடுத்த முறை வரும்போது அ.தி.மு.க., உடையும்: தி.மு.க., ஆரூடம்
/
அமித்ஷா அடுத்த முறை வரும்போது அ.தி.மு.க., உடையும்: தி.மு.க., ஆரூடம்
அமித்ஷா அடுத்த முறை வரும்போது அ.தி.மு.க., உடையும்: தி.மு.க., ஆரூடம்
அமித்ஷா அடுத்த முறை வரும்போது அ.தி.மு.க., உடையும்: தி.மு.க., ஆரூடம்
ADDED : ஜூலை 18, 2025 01:23 AM
சேலம், ''அமித்ஷா அடுத்த முறை வரும் போது, அ.தி.மு.க., இ.பி.எஸ்., அணி, வேலுமணி அணி என உடைகிறதா இல்லையா பாருங்கள்,'' என, தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி பேசினார்.
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம், நேற்று முன்தினம் இரவு, கோட்டை மைதானத்தில் நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை உலக நாடுகள் பின்பற்றுகின்றன. இ.பி.எஸ்., பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. ஹிட்லர் அமைச்சரவையில், கோயபல்ஸ் என்ற அமைச்சர் நாள்தோறும், 50 பொய்களாவது கூறுவார். அது போல், இ.பி.எஸ். வாய்க்கு வந்ததை எல்லாம் பொய்யாக, சம்பந்தமில்லாமல் தொடர்ந்து ஒவ்வொரு கூட்டத்திலும், அறிக்கையிலும் சொல்லிக் கொண்டிருக்கிறார். மோடியோ, அமித் ஷாவோ, இ.பி.எஸ்.,ஐ, கைப்பாவையாக வைத்து, ஓட்டுகளை பெறலாம் என பார்க்கின்றனர்; அது நடக்காது. இவ்வாறு பேசினார்.
அமைப்பு செயலாளர்
ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:
தமிழகத்திலிருந்த, 5,000க்கும் மேற்பட்ட பள்ளிகளை மூடி விட்டு, குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி கொண்டு வந்தார். அதை எதிர்த்த காமராஜருக்கு ஆதரவு அளித்தது, தி.மு.க.,தான். உத்தர பிரதேசத்தில் குலக்கல்வியின் மற்றொரு வடிவமாக விஸ்கர்மா திட்டத்தை, பா.ஜ., அமல்படுத்தியுள்ளது. அந்த ஆட்சியை இங்கு கொண்டு வர, இ.பி.எஸ்., துடிக்கிறார்.
அமித் ஷா கதவை தட்டினால்தான் பணம் கிடைக்குமாம். சென்னை வந்த மோடி, ஜெயலலிதாவை நேரில் சென்று பார்க்கவில்லையா?
செங்கோட்டையன் இல்லாவிட்டால், இன்று இ.பி.எஸ்., ஆயுள் கைதியாக இருந்திருப்பார்.
ஸ்டாலினை பற்றி மரியாதையாக பேச வேண்டும். ஜெயலலிதாவின் வீடான கொடநாட்டை காப்பாற்ற முடியாதவர், நாட்டை எப்படி காப்பாற்றுவார்?
கொடநாடு வழக்கு சூடுபிடிக்க போகிறது. அதனால் தான் அமித் ஷா காலில் விழுந்துள்ளார்.
எம்.பி., தேர்தலுக்காக, 8 முறை மோடி தமிழகம் வந்தார். அதுவரை, தி.மு.க.,வுக்கு, 39 ஆக இருந்த எம்.பி., சீட்களின் எண்ணிக்கை, 40 ஆக உயர்ந்தது. ஒரு முறை அமித் ஷா வந்ததும், பா.ம.க., கலகலத்து போய்விட்டது. மறுமுறை வந்த போது, செல்லுார் ராஜூவிடமிருந்து, 200 கோடி ரூபாய் காணாமல் போய்விட்டது. அடுத்த முறை அமித் ஷா வரும் போது, அ.தி.மு.க.,வில் இ.பி.எஸ்., அணி, வேலுமணி அணி என உடைகிறதா இல்லையா பாருங்கள். அமித் ஷா, இ.பி.எஸ்.,ஐ அருகில் வைத்துக்கொண்டே கூட்டணி ஆட்சி என்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், சட்டத்துறை இணை செயலர் சூர்யா வெற்றி கொண்டான், மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ், மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.