/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வீரபாண்டி உள்பட 11 தொகுதியிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்'
/
'வீரபாண்டி உள்பட 11 தொகுதியிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்'
'வீரபாண்டி உள்பட 11 தொகுதியிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்'
'வீரபாண்டி உள்பட 11 தொகுதியிலும் அ.தி.மு.க., வெற்றி பெறும்'
ADDED : அக் 14, 2025 07:18 AM
பனமரத்துப்பட்டி: மல்லுாரில், அ.தி.மு.க., சார்பில் டவுன் பஞ்., நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மல்லுார் நகர அ.தி.மு.க., செயலர் பழனிவேலு வரவேற்றார். பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய செயலர் ஜெகநாதன், கிழக்கு ஒன்றிய செயலர் பாலச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.
சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:
கடந்த, 15 ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வின் கோட்டையாக வீரபாண்டி உள்ளது. யாரும் அசைத்து பார்க்க முடியாத வகையில் கட்சி நடத்தி வருகிறோம். ஓரணி, ஸ்டாலின் அணி என, எந்த அணியும் செல்லுபடியாகாது. இ.பி.எஸ்., அணியே வெல்லும். சேலத்துக்கு 5 பொறுப்பு அமைச்சர்கள் வந்துட்டாங்க. எத்தனை பேர் வந்தாலும் வீரபாண்டி உள்பட, 11 தொகுதியிலும் அ.தி.மு.க.,வெற்றி பெறும்.இவ்வாறு பேசினார்.
வீரபாண்டி அ.தி.மு.க.,எம்.எல்.ஏ.,ராஜமுத்து பேசுகையில்,'' மல்லுாரில் கால்நடை மருந்தகத்தை சுற்றி, ஆறு மாதமாக தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவில்லை. மல்லுாரில், 5 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளனர். அ.தி.மு.க.,வார்டில் எந்த வேலையும் செய்யவில்லை. தி.மு.க.,வார்டில் வேலை செய்கின்றனர். தி.மு.க.,ஆட்சியில், சட்டம்-ஒழுங்கு அடியோடு கெட்டு விட்டது,'' என்றார்.
அ.தி.மு.க.,அமைப்பு செயலர் செம்மலை, தி.மு.க., அரசை கண்டித்து பேசினார். மாவட்ட அம்மா பேரவை தலைவர் தமிழ்மணி, துணைத்தலைவர் சித்துராஜ், பனமரத்துப்பட்டி நகர செயலர் சின்னதம்பி, ஒன்றிய துணை செயலர் செந்தில்குமார், அ.தி.மு.க.,கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.