ADDED : செப் 12, 2026 05:46 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்; ஓமலுார் அரசு மருத்துமவனை, பெரியார் பல்-கலை செஞ்சுருள் சங்கம் இணைந்து, எச்.ஐ.வி., - எய்ட்ஸ் விழிப்புணர்வு ஆட்டோ பேரணியை நேற்று நடத்தின.
ஓமலுார் பயணியர் மாளி-கையில், பெரியார் பல்கலை பதிவாளர் ராஜ், ஆட்டோ பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழிப்புணர்வு ஊர்வ-லத்தை, ஓமலுார் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ெஹலன்குமார் தொடங்கி வைத்தார். 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், கடைவீதி வழியே சென்று, ஓமலுார் டவுன் பஞ்சாயத்து அலுவலகம் அருகே நிறைவு செய்தனர். அங்கு விழிப்புணர்வு கலைநி-கழ்ச்சி நடந்தது. செஞ்சுருள் மண்டல ஒருங்கி-ணைப்பாளர் இளங்கோவன் உள்பட பலர் பங்-கேற்றனர்.
