ADDED : ஆக 20, 2026 03:08 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் மாநகர் மதுவிலக்கு போலீசார், வேம்படிதாளம் அருகே திருவளிப்பட்டி, சந்தைப்பேட்டையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள வீட்டின் முன், கறுப்பு நிற பிளாஸ்டிக் பேரல், காலி சில்வர் குடத்துடன் ஒருவர் நின்றி-ருந்தார். அவர், போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த மாதையன், 62, என தெரிந்தது.
பிளாஸ்டிக் பேரலை திறந்து பார்த்தபோது, கள்ளச்சாராயம் காய்ச்ச, மூலப்பொருட்களை சேர்த்து, 30 லிட்டர் தண்ணீரில் ஊற வைத்திருப்பதும், அதிகமான போதை வருவதற்கு பூச்சி மருந்து கலந்திருப்பதையும் மாதையன் ஒப்புக்கொண்டார். ஊறலை அழித்த போலீசார், மாதையனை கைது செய்தனர்.
