/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பணியை ஒப்படைத்த பின் கூடுதல் நிதி ஒதுக்கீடு முறைகேடுக்கு திட்டமிட்டு செய்வதாக குற்றச்சாட்டு
/
பணியை ஒப்படைத்த பின் கூடுதல் நிதி ஒதுக்கீடு முறைகேடுக்கு திட்டமிட்டு செய்வதாக குற்றச்சாட்டு
பணியை ஒப்படைத்த பின் கூடுதல் நிதி ஒதுக்கீடு முறைகேடுக்கு திட்டமிட்டு செய்வதாக குற்றச்சாட்டு
பணியை ஒப்படைத்த பின் கூடுதல் நிதி ஒதுக்கீடு முறைகேடுக்கு திட்டமிட்டு செய்வதாக குற்றச்சாட்டு
ADDED : அக் 26, 2024 08:04 AM
சேலம்: 'ஒவ்வொரு திட்ட பணியிலும் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்த பின் மீண்டும் கூடுதல் செலவினம் எனக்கூறி நிதி ஒதுக்கீடு செய்-யப்படுகிறது. இது முறைகேடுகளுக்காகவே திட்டமிட்டு செய்வ-தாக தோன்றுகிறது' என, அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றம்சாட்-டினார்.
சேலம் மாநகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, மேயர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அதில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
தி.மு.க., இளங்கோ: அம்மாபேட்டையில் பாலம் கட்டுவதற்கு குழி தோண்டப்பட்டது. அதற்கு பிரதான சாலை துண்டிக்கப்-பட்டு, 3 மாதங்களாகியும் இன்னும் பணி முடியவில்லை. குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டுள்ளன. ஆனால்,
அதிகாரிகள், பொறுப்-பின்றி அலட்சியத்துடன் செயல்படுகின்றனர். மழைக்கால அவசர பணிகளுக்கு பணம் ஒதுக்க முடியாத நிலையில், கமிஷனர் அலு-வலகம், 49 லட்சம் ரூபாயில் அழகுபடுத்தப்பட்டுள்ளது. இது அவசியமா?
வி.சி., இமயவர்மன்: மாநகராட்சி அலுவலகங்கள், அரசு சுவர்-களில் விளம்பர பிளக்ஸ்கள் நிரம்பி வழிகின்றன. இவற்றை அகற்-றுவதே இல்லை. அதிகாரிகள் என்ன செய்கின்றனர்? 'நமக்கு நாமே' திட்டத்தில் மக்கள் ஒதுக்கீடு
பணத்தை கொடுத்து, 8 மாதங்களுக்கு மேலாகியும் பணி தொடங்கப்படவில்லை.
தி.மு.க., உமாராணி: பாறைக்காட்டில் மழை வந்தால் எப்போ-துமே மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றும் நிலை உள்-ளது. இதற்கு தீர்வு காண வேண்டும்.
தி.மு.க., திருஞானம்: புனரமைக்கப்பட்ட குமரகிரி ஏரியில் ஆகா-யத்தாமரைகள் படர்ந்துள்ளன. அவற்றை அகற்றுவதோடு கம்பி வேலி அமைத்து பாதுகாப்பு வசதி ஏற்படுத்த வேண்டும்.
அதிகாரிகள் நெருக்கடி
தி.மு.க., சரவணன்: 56வது வார்டில் பவர்லுாம் தொழிலின் உப தொழிலான வார்ப்பிங், வைண்டிங் உள்ளிட்ட தொழில்கள், குடிசை தொழிலாக செய்யப்படுகின்றன. இதற்கு அரசு, 500 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குகிறது.
ஆனால், மாநக-ராட்சி அதிகாரிகள் தற்போது இவர்களுக்கு வணிக இடத்துக்கான வரி, தொழில் வரி உள்ளிட்டவை செலுத்த நெருக்கடி கொடுக்-கின்றனர். இதை கைவிட வேண்டும்.
அ.தி.மு.க., செல்வராஜ்: சேலத்தை சேர்ந்தவர் அமைச்சரானதற்கு, இங்கு மகிழ்ச்சி தெரிவித்தனர். அவர் சேலம் மாநகராட்சிக்கு கூடுதல் நிதி பெற்றுத்தந்தால்தான் உண்மையான மகிழ்ச்சியாக இருக்கும். பாதாள சாக்கடை திட்ட
பணி, ஒப்பந்தப்படி நடக்-காமல் தரக்குறைவாக நடந்துள்ளது. இதனால் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகு-றித்த ஒப்பந்த விதிமுறை குறித்த ஆவணங்களை கவுன்சிலர்க-ளுக்கு வழங்க
வேண்டும். ஒவ்வொரு திட்ட பணியிலும் ஒப்பந்த-தாரரிடம் ஒப்படைத்த பின் மீண்டும் கூடுதல் செலவினம் எனக்-கூறி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது அதிகாரிகள் திட்டமிடு-தலில் தவறு செய்வதாக தெரியவில்லை.
முறைகேடுகளுக்காகவே திட்டமிட்டு செய்வதாக தோன்றுகிறது.
அ.தி.மு.க., வெளிநடப்பு
இதையடுத்து மேயர் ராமச்சந்திரன், ஆளுங்கட்சி தலைவரை தீர்-மானங்களை வாசிக்க அறிவுறுத்தினார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் யாதவ மூர்த்தி, பேச வாய்ப்பளிக்காததை கண்டித்து கோஷம் எழுப்பினார். தொடர்ந்து
தீர்மானம் வாசிக்கப்பட்டதால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
இதுகுறித்து யாதவமூர்த்தி கூறுகையில், ''குடிநீர் பராமரிப்புக்கு என, 1 மாதத்தில், 1.10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளனர். ஆனாலும், 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வருகிறது. தொழில் வரி வசூல் கணக்கு
காட்டப்படுவதில்லை. அது எங்கே போகிறது? மழைநீர் வடிகால் உட்கட்டமைப்பு செய்ய முடிய-வில்லை என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுப்ப இருந்த நிலையில், எனக்கு பேச வாய்ப்பு அளிக்கவில்லை. 3 ஆண்டுக-ளாக,
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். அதை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்,'' என்றார்.