தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

அம்பேத்கர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


ADDED : ஏப் 15, 2026 06:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம், :சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின், 136வது பிறந்தநாள், நேற்று கொண்டாடப்பட்டது. அதை ஒட்டி, சேலத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி.மு.க., சார்பில் அமைச்சர் ராஜேந்திரன், இ.கம்யூ., தேசிய கட்டுப்பாடு குழு உறுப்பினர் முத்தரசன், மாலை அணிவித்து, அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினர். தி.மு.க., ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் முரளி, சி.பி.ஐ., மாவட்ட செயலர் மோகன் உள்பட பலர் உடனிருந்தனர்.

மாநகர் காங்., சார்பில் அதன் தலைவர் சாரதாதேவி தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்தனர். த.மா.கா., நிர்வாகி உலகநம்பி, அம்பேத்கர் மக்கள் இயக்க மாநில தலைவர் அண்ணாதுரை ஆகியோரும் மரியாதை செலுத்தி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர். மாவட்ட தலைவர் அம்பேத்கர், செயலர் சித்தையன், மாநகர் தலைவர் முருகன் உள்பட பலர் உடனிருந்தனர். பல்வேறு கட்சியினர், அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பா.ஜ., ஊர்வலம்

சேலம் மாநகர மாவட்ட பா.ஜ., சார்பில், மரவனேரியில் உள்ள ஆடிட்டர் ரமேஷ் நினைவு கொடி கம்பத்தில் ஊர்வலம் தொடங்கி, சுந்தர் லாட்ஜ் அருகே உள்ள அம்பேத்கர் சிலை பகுதியில் நிறைவடைந்தது. அங்கு மாநகர் மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமையில், முன்னாள் மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us