/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலம் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி தலையில் அடித்து கொலை
/
சேலம் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி தலையில் அடித்து கொலை
சேலம் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி தலையில் அடித்து கொலை
சேலம் அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி தலையில் அடித்து கொலை
ADDED : ஜன 28, 2025 07:26 AM
வீரபாண்டி: சீரகாபாடியில் தனியாக வசித்து வந்த, 88 வயது மூதாட்டி, தலையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
சேலம் அருகே, சீரகாபாடி மதுரையான்காட்டை சேர்ந்தவர் கந்தசாமி. இவர், 20 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி சின்னத்தாயி, 88. இவர்களுக்கு சுப்பிரமணி என்ற மகன், சின்னரசி, 70 என்ற மகள் உள்ளனர். இவர்களில் சுப்பிரமணி, 15 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். மகள் சின்னரசிக்கு விஜயா, 50, தெய்வானை, 48, என இரு மகள்கள், மகாலிங்கம், 45. என்ற மகன் உள்ளனர். சுப்பிரமணிக்கு சேகர், 53, செல்வம், 50, என இரு மகன்கள், ஜோதி, 48, என்ற மகள் உள்ளனர்.
சின்னதாயி மட்டும், தனியாக மதுரையான்காட்டில் வசித்து வந்தார். மகள் வழி பேத்திகள் இருவரும் சீரகாபாடியில் உள்ளனர். இவர்களும், ராக்கிப்பட்டியில் மகன் மகாலிங்கத்துடன் வசித்து வரும் சின்னரசியும், சின்னதாயிக்கு சாப்பாடு கொடுத்து ஆதரவாக இருந்தனர். மகன் வழி பேரன்கள், பேத்தி ஆகியோர் தாரமங்கலம் அமரகுந்தி அருகே ரெட்டிப்பட்டியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக துாங்கி கொண்டிருந்த மூதாட்டி சின்னதாயியை, யாரோ தலையில் பலமாக தாக்கி அடித்து கொலை செய்துள்ளனர்.
நேற்று காலை, 7:45 மணிக்கு அருகில் இருப்பவர்கள் சின்னதாயி விட்டுக்கு சென்று பார்த்த போது, கட்டிலில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். அவர்கள் ராக்கிப்பட்டியில் உள்ள பேரன் மகாலிங்கத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வந்து பார்த்த மகாலிங்கம், பாட்டி கொலை குறித்து ஆட்டையாம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் துணை கமிஷனர் வேல்முருகன், கொண்டலாம்பட்டி உதவி கமிஷனர் முரளி, ஆட்டையாம்பட்டி இன்ஸ்பெக்டர் விதுன்குமார், கொண்டலாம்பட்டி இன்ஸ்பெக்டர் சாரதா உள்ளிட்ட போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, சின்னதாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தடய அறிவியல் துறை போலீசார் கைரேகை, தடயங்களை சேகரித்தனர். மூதாட்டி கொலை செய்யப்பட்ட வீட்டில் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இவர் வசித்த வீடு மற்றும் முன்புறம் உள்ள காலி நிலம் மகள் சின்னரசி பெயரில் உள்ளது. இறந்து போன மகன் சுப்பிரமணியத்தின் வாரிசுகள் பாட்டியிடம் சொத்து கேட்டு தகராறு செய்து வந்துள்ளனர். கொலை குறித்து, பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை துவக்கி கொலையாளியை தேடி வருகின்றனர்.