/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வனப்பகுதியில் எலும்பு கூடாக கிடந்த யானை சடலம்
/
வனப்பகுதியில் எலும்பு கூடாக கிடந்த யானை சடலம்
ADDED : நவ 12, 2024 07:11 AM
ஓசூர்: உரிகம் வனப்பகுதியில், அழுகிய நிலையில் எலும்பு கூடாக கிடந்த ஆண் யானை உடலை மீட்டு, வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டம், உரிகம் வனச்ச-ரகத்திற்கு உட்பட்ட அத்திநத்தம் மலை சரிவு வனப்பகுதியில், அழுகிய நிலையில் எலும்பு கூடாக ஆண் யானையின் உடல் கிடந்தது. உரிகம் வனவர் சிவக்குமார் அதை பார்த்து, ஓசூர் வனக்-கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனிக்கு தகவல் தெரி-வித்தார்.
அவரது உத்தரவின்படி, நாட்றாம்பாளையம் வன கால்-நடை உதவி மருத்துவக் குழுவினர், யானையின் உடலை உடல்கூ-றாய்வு செய்தனர்.யானையின் தலைப்பகுதி எலும்புடன் இரு தந்தங்களும் இருந்-தன. அதை வனத்துறையினர் கைப்பற்றினர். உயிரிழந்த யானைக்கு, 30 வயது இருக்கலாம் என்றும், யானையின் உடலில் தந்தங்கள் இருந்ததால், அது வேட்டையாடி கொல்லப்பட வாய்ப்-பில்லை. மற்றொரு ஆண் யானையுடன் ஏற்பட்ட மோதலில், தந்-தத்தால் குத்துப்பட்டு, பாறையில் இருந்து விழுந்து யானை உயிரி-ழந்திருக்கலாம் அல்லது உடல்நிலை பாதித்து இறந்திருக்கலாம் என தெரிவித்த வனத்துறையினர், தொடர்ந்து விசாரித்து வருகின்-றனர்.

