/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வன்னியர்கள் தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாதீர் பா.ம.க., கூட்டத்தில் அன்புமணி வலியுறுத்தல்
/
வன்னியர்கள் தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாதீர் பா.ம.க., கூட்டத்தில் அன்புமணி வலியுறுத்தல்
வன்னியர்கள் தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாதீர் பா.ம.க., கூட்டத்தில் அன்புமணி வலியுறுத்தல்
வன்னியர்கள் தி.மு.க.,வுக்கு ஓட்டு போடாதீர் பா.ம.க., கூட்டத்தில் அன்புமணி வலியுறுத்தல்
ADDED : அக் 31, 2025 12:48 AM
இடைப்பாடி, ''தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க, வன்னியர்கள் யாரும், தி.மு.க.,வுக்கு ஓட்டு போடக்கூடாது,'' என, பா.ம.க., தலைவர் அன்புமணி பேசினார்.
பா.ம.க., சார்பில், மகுடஞ்சாவடியில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. சேலம் தெற்கு மாவட்ட தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். அதில், கட்சி தலைவர் அன்புமணி பேசியதாவது:
தமிழகம் முழுதும் சென்று விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு மக்களை, இந்த நடைபயணத்தில் சந்தித்து வருகிறேன். இதன் நோக்கமே, இந்த மோசமான தி.மு.க., ஆட்சியை அகற்ற வேண்டும். தமிழகத்தில், 75 ஆண்டுகளில் இருந்த முதல்வர்களில் மிக மோசமான முதல்வர் ஸ்டாலின்தான். நிர்வாக திறமையற்ற முதல்வர்.
வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தரவில்லை என்றால், டிச., 17ல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். மலை, ஆற்று மண்ணை திருடியவர்கள், தற்போது கிட்னியையும் திருட ஆரம்பித்துள்ளார்கள். தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பெண்களை, பெண் குழந்தைகளை யாராலும் காப்பாற்ற முடியாது. அதனால் தி.மு.க., மீண்டும் ஆட்சிக்கு வராமல் இருக்க, வன்னியர்கள் யாரும், தி.மு.க.,வுக்கு ஓட்டு போடக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.
பொது செயலர் வடிவேல்ராவணன், முன்னாள் எம்.எல்.ஏ., கார்த்தி, பா.ம.க.,வின் சேலம் தெற்கு மாவட்ட செயலர் செல்வகுமார், மாநில துணை தலைவர் அண்ணாதுரை, முன்னாள் எம்.பி., தேவதாஸ், மாநில இளைஞர் சங்க துணை செயலர் ரவி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், மாவட்ட இளைஞர் சங்க செயலர் மாதேஸ், ஒன்றிய செயலர்கள் முத்துகிருஷ்ணன், வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

