/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கழிவுநீர் பிடியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஆபத்து
/
கழிவுநீர் பிடியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஆபத்து
கழிவுநீர் பிடியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஆபத்து
கழிவுநீர் பிடியில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஆபத்து
ADDED : ஆக 30, 2025 01:03 AM
பனமரத்துப்பட்டி, தாசநாயக்கன்பட்டி ஊராட்சி சின்னையாபுரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், அங்கன்வாடி மையம் உள்ளது. அங்கு, 20க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது. அந்த மையம் பின்புறத்தில், பெரிய பள்ளம் உள்ளது. அதில் கழிவுநீர் தேங்கி, பச்சை நிறத்துக்கு மாறி துர்நாற்றம் வீசுகிறது.
அதேபோல் மையம் முன்புறம், சாக்கடை கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. மற்றொரு புறத்திலும் கழிவு நீர் ஓடுகிறது. மையத்தை சுற்றியும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம், கொசு தொல்லை தாங்க முடியாதபடி உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு தொற்று நோய் தாக்கும் ஆபத்து உள்ளது. மேலும் கழிவு நீர் குட்டையில் இருந்து தேள், பூரான், பாம்பு, அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் மையத்துக்கு படையெடுக்கின்றன. அங்கன்வாடி செல்ல சரியான சாலை வசதி இல்லை. சேறு சகதி, கல்லாங்குத்து பாதையில் தட்டுத்தடுமாறி பெற்றோர், குழந்தைகள் செல்கின்றனர்.
இதுகுறித்து அரசு அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை என, மக்கள் குற்றம்சாட்டினர். அதனால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.