/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'5ஜி' மொபைல் போன் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
/
'5ஜி' மொபைல் போன் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
'5ஜி' மொபைல் போன் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
'5ஜி' மொபைல் போன் வழங்கக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்
ADDED : ஆக 22, 2025 01:47 AM
ஓமலுார், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், ஓமலுார், தாத்தியம்பட்டியில் உள்ள வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஓமலுார் வட்டார தலைவி உமையாள் தலைமை வகித்தார்.
அதில் மைய பணிகளை செய்ய, '5ஜி' மொபைல் போன், '5ஜி' சிம் கார்டு வழங்குதல்; அந்தந்த கிராமத்துக்கு நெட்வொர்க்குக்கு ஏற்பட்ட, 'சிம்' வழங்குதல்; மையத்தில் 'வை - பை' வசதி ஏற்படுத்தல் உள்பட, 5 கோரிக்கைகளை வலியுறுத்தினர். சேலம் மாவட்ட துணை செயலர் வசந்தலட்சுமி உள்பட, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அதேபோல் தாரமங்கலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள அங்கன்வாடி அலுவலகம் முன், பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருங்கிணைப்பாளர் சகுந்தலா தலைமை வகித்தார். அதில் சத்துமாவு வழங்கும்போது பயனாளிகள் முகப்பதிவு போட்டோ பதிவிடும் முறையை கைடுவிடுதல் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை வலியுறுத்தினர். 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.