தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்: கடும் போக்குவரத்து பாதிப்பு

அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்: கடும் போக்குவரத்து பாதிப்பு

அங்கன்வாடி ஊழியர்கள் மறியல்: கடும் போக்குவரத்து பாதிப்பு


ADDED : பிப் 06, 2026 04:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 04:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: பணி நிரந்தரம் கோரி, தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்-கங்களின் கூட்டமைப்பினரின், 3வது நாள் மறியல் போராட்-டத்தால், மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

சேலம் கோட்டை மைதானத்தில், 3வது நாளாக நேற்று மாவட்-டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், தங்கள் கோரிக்கையை நிறைவேற்-றக்கோரி, கோட்டை மைதானத்தில் அமர்ந்து போராட்டம் நடத்-தினர். 10 நிமிடங்களுக்கு பிறகு, திடீரென மைதானத்தில் இருந்து கிளம்பி, சேலம் மாநகராட்சி அலுவலகம் முன் 'கொரோனா வாரியர்ஸ்' ரவுண்டானாவில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்-டனர். இதனால் செவ்வாய்பேட்டை பிரதான சாலை, அப்சரா சாலை, கலெக்டர் அலுவலக சாலைகளில் கடுமையான போக்குவ-ரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.இதுகுறித்து கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சரோஜா கூறு-கையில், ''தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியதைபோல் அங்-கன்வாடி ஊழியர்கள், சத்துணவு திட்ட அமைப்பாளர் பணியாளர்-களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, 3 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தொடர் மறியல் போராட்டங்களை நடத்தி வருகிறோம், தமிழக அரசு உட-னடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.

மறியலில் ஈடுபட்ட, 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி அருகிலுள்ள தனியார் மண்டபத்-துக்கு அழைத்து சென்றனர். மறியலால் அரை மணி நேரம் போக்-குவரத்து பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு வரும் நோயா-ளிகள், மதிய உணவுக்கு சென்ற மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us