sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

/

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : பிப் 07, 2026 04:26 AM

Google News

ADDED : பிப் 07, 2026 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தமிழ்நாடு மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்க, சேலம் மாவட்ட மையம் சார்பில், பணி நிரந்தரம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, சேலம் கோட்டை மைதா-னத்தில், நேற்று காத்திருப்பு போராட்டம் தொடங்கப்பட்டது.

சங்க மாநில துணைத்தலைவி சரோஜா தலைமையில் காலை, 11:00 மணியளவில், ஒருசேர திரண்ட அங்கன்வாடி ஊழியர்கள், 11:30 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலர் மனோன்மணி கூறியதாவது:கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், கோரிக்கையை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், அனைவரும் பணிக்கு திரும்புங்கள். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், உங்களு-டைய கோரிக்கை நிறைவேற்றி வைக்கப்படும் என அறிக்கை வெளியிட்டார். அதையேற்று, நாங்களும் பணிக்கு சென்றோம். தொடர்ந்து, தி.மு.க., தேர்தல் அறிக்கை வரிசை எண்:313ல், அங்-கன்வாடி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என தெரி-வித்து, வாக்குறுதி அளித்தார். அதன்படி, ஆட்சிக்கு வந்து 5 ஆண்டு கள் முடியும் தருவாயிலும், வாக்குறுதியை நிறைவேற்ற-வில்லை. அதனால், பணி நிரந்தரம் என அரசாணை வெளி-யிட்டால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம். ஏற்கனவே, 3 நாள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நாளாவது நாளில் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளோம். இனி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு கூறினார். மாவட்ட தலைவர் பிரேமா உள்பட பலர் கலந்து

கொண்டனர்.






      Dinamalar
      Follow us