ADDED : செப் 17, 2026 06:38 AM

அ நிறம் | அளவு
சேலம்; அனைத்து மாவட்டங்களிலும், த.வெ.க., நிர்வாகிகள், தொண்டர்கள், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 118வது பிறந்தநாளை கொண்டாட, தமிழக முதல்வர் விஜய் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து போக்குவ-ரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவுறுத்தலின்படி, சேலம் மத்திய மாவட்ட இணை செயலர் சுப்ரமணி தலைமையில், த.வெ.க.,வினர், நேற்று முன்தினம், அம்மா-பேட்டை காந்தி மைதான பகுதியில், அண்ணா-துரை படத்துக்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அப்பகுதி மக்-களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் சேலம் கிழக்கு மாநகர செயலர் ஞானசேகரன், வார்டு, பகுதி, நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
