/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை நினைவு தினம் அனுசரிப்பு
/
சேலத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை நினைவு தினம் அனுசரிப்பு
சேலத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை நினைவு தினம் அனுசரிப்பு
சேலத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில் அண்ணாதுரை நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : பிப் 04, 2025 06:37 AM
சேலம்: சேலத்தில், மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 56வது நினைவுதினம் நேற்று அனு-சரிக்கப்பட்டது.
மாவட்ட அவைத்தலைவர் சுபாஷ் தலைமையில், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஈ.வெ.ரா., சிலை பீடம் பகுதியில் இருந்து, அமைதி ஊர்வலம் புறப்பட்டது. திருவள்ளுவர் சிலை, கிழக்கு கோட்ட தலைமை தபால் அலுவலகம் வழியாக சென்ற ஊர்வலம், பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அண்ணாதுரை சிலையை
வந்தடைந்தது. அதன்பின், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேயர்
ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், மாநகர் செயலர் ரகுபதி, மாநில தேர்தல் பணிக்குழு
செயலர் தாமரைக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் மணி, மண்டலக்குழு தலை-வர்கள் அசோகன்,
தனசேகரன், உமாராணி உள்பட கட்சியினர் கலந்து கொண்டனர்.
* தி.மு.க., விளையாட்டு மேம்பாடு அணி மாநில துணை செய-லரும், முன்னாள் எம்.பி.,யுமான பார்த்திபன்
தலைமையில், சேலம் 4 ரோடு சந்திப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் அண்-ணாதுரை படத்துக்கு மாலை
அணிவித்து மரியாதை செலுத்தப்-பட்டது. தலைமை பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் அண்ணா-மலை, கவுன்சிலர்
ஜெயக்குமார், நிர்வாகிகள் கோபால், ராஜா, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.* ஆத்துார், கோட்டை பகுதியில் முன்னாள் முதல்வர் அண்ணாது-ரையின் நினைவு நாளையொட்டி, சேலம்
புறநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை-யிலான கட்சியினர் மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினர். எம்.எல்.ஏ.,க்கள் ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி,
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாதேஸ்வரன், சின்னதுரை, நகர செயலர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.