/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அண்ணாதுரை பிறந்தநாள் விழா தி.மு.க., - அ.தி.மு.க., கொண்டாட்டம்
/
அண்ணாதுரை பிறந்தநாள் விழா தி.மு.க., - அ.தி.மு.க., கொண்டாட்டம்
அண்ணாதுரை பிறந்தநாள் விழா தி.மு.க., - அ.தி.மு.க., கொண்டாட்டம்
அண்ணாதுரை பிறந்தநாள் விழா தி.மு.க., - அ.தி.மு.க., கொண்டாட்டம்
ADDED : செப் 16, 2025 01:37 AM
சேலம், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 117வது பிறந்த நாளையொட்டி, சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள அவரது சிலைக்கு, நேற்று, சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தி.மு.க., நிர்வாகிகள், 'தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம்' என, உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., சார்பில், சேலம் மாநகர் மாவட்ட செயலர் பாலு தலைமையில் கட்சியினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அவைத்தலைவர் பன்னீர்செல்வம், தெற்கு எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், பொருளாளர் வெங்கடாஜலம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தி.மு.க.,வின் சேலம் மேற்கு மாவட்டம் சார்பில், தாரமங்கலத்தில், எம்.பி., செல்வகணபதி தலைமையில் கட்சியினர், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். நகர செயலர் குணசேகரன், ஒன்றிய செயலர் பாலகிருஷ்ணன், மாவட்ட துணை செயலர்கள் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.
பனமரத்துப்பட்டி தி.மு.க., சார்பில், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், வீரபாண்டி தொகுதி பொறுப்பாளர் கிருபாகரன் உள்ளிட்டோர், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தனர். அ.தி.மு.க., சார்பில், வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ., ராஜமுத்து மாலை
அணிவித்தார்.
அயோத்தியாப்பட்டணம், உடையாப்பட்டியில், அண்ணாதுரை சிலைக்கு, தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலர் விஜயகுமார் தலைமையில் கட்சியினர், மாலை அணிவித்தனர். அ.தி.மு.க., சார்பில், அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய செயலர் ராஜ
சேகரன் தலைமையில் மரியாதை செலுத்தப்பட்டது.
இடைப்பாடியில் அண்ணாதுரை படத்துக்கு, தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் பாஷா, மாலை அணிவித்தார். அ.தி.மு.க., சார்பில், நகர செயலர் முருகன், மாலை அணிவித்தார்.
ஆத்துார், கோட்டையில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன், மாலை அணிவித்தார். எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.