கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : மார் 10, 2026 04:39 AM
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், காளிகவுண்டர் காடு ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் கலையரசி, 25. இவர் எருமாபாளையத்தில் உள்ள, நுாற்பாலை மில்லில் வேலை பார்தது வருகிறார்.
கடந்த ஜன.,4ல் கலையரசி பணியை முடித்து விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி மற்றும் கூட்டாளிகள் நந்தகுமார், சஞ்சய், பேரல் விஜய், சதாம் லாலா, பூவரசன், சண்முகி டேவிட், இளை-யராஜா, கமல், விமல், போல்பிரபு, உள்ளிட்டோர், கலையரசியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்து, கலையரசியின் பையில் இருந்த சம்பளத்தொகை, 3,500 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, பணம் பறிப்பில் ஈடுபட்ட ரவுடி சதாம் உசேன், 26, விஸ்வ-நாதன், 24, இளையராஜா, 23, பூவரசன், 25, கமல், 25, விஜய், 26, ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் பலர் தலைமறைவாக உள்ளனர்.
போலீசார் தேடிவந்த நிலையில், நேற்று கிச்சிப்பாளையம் பகு-தியில் பதுங்கி இருந்த சண்முகம், 32, என்பவரை கைது செய்-தனர்.
