/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புகையிலை எதிர்ப்பு; விழிப்புணர்வு பேரணி
/
புகையிலை எதிர்ப்பு; விழிப்புணர்வு பேரணி
ADDED : மே 31, 2025 06:16 AM
சேலம்: சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., ரவிக்குமார் தலைமை வகித்தார்.
அதில் தனியார் அறக்கட்டளை சார்பில் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொம்மலாட்டம், ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து சீரகாபாடி தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவனை மற்றும் உடையாப்பட்டி தனியார் பள்ளியில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், 'புகையிலை பயன்படுத்த மாட்டோம்' என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. அதில் மாணவர்கள், புகையிலை பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட தட்டிகளை ஏந்தி, வள்ளுவர் சிலை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, மாநகராட்சி அலுவலகம் வழியே சென்று, மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு செய்தனர்.