தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ நில வகைப்பாட்டை மாற்ற நீர் ஆதார இயக்கம் எதிர்ப்பு

நில வகைப்பாட்டை மாற்ற நீர் ஆதார இயக்கம் எதிர்ப்பு

நில வகைப்பாட்டை மாற்ற நீர் ஆதார இயக்கம் எதிர்ப்பு


ADDED : நவ 29, 2026 01:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 01:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் நீர் ஆதார பாதுகாப்பு இயக்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் செயலர் அருண் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று, மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு உதவி இயக்குனர் சுரேஷிடம் அளித்த மனு:

ஜாகீர் அம்மாபாளையம் பகுதி, தற்போது வரை பாதுகாக்கப்பட்ட சுரங்கம் மற்றும் குவாரிகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வருவாய்த்துறை ஆவணங்களில் தீர்வை ஏற்படாத கரடு மற்றும் பயன்பாடு காலத்தில் நீர் தொட்டி என வகைப்படுத்தப்பட்டுள்ளன. புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆவணப்படி, 67 லட்சம் டன் மேக்னசைட் கனிமங்கள், 3,860 கோடி ரூபாய் மதிப்பில் இன்னும் எடுக்கப்

படாமல் உள்ளன.

அங்கு ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம், போராட்டத்தால் கைவிடப்பட்டு, சேலம் யார்ன் கலரிங் பார்க் நிறுவனம் மூடப்பட்டது. கனிம வளங்கள் நிறைந்த இந்நிலத்தை, ஜவுளி பூங்காவுக்கு ஒதுக்கியதை எதிர்த்து மேக்னசைட் பாட்டாளி தொழிலாளர் சங்கம், சென்னை உயர்

நீதிமன்றத்தில் தொடர்ந்த, 3 தனித்தனி வழக்குகள் விசாரணையில் உள்ளன. இந்நிலையில் மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு இயக்கம் தன்னிச்சையாக செயல்பட்டு, 'மாஸ்டர் பிளான்' திட்டத்தில் ஜாகிர் அம்மாபாளையத்தை ஜவுளி பூங்கா என, நிலத்தின் வகைப்பாட்டை மாற்றக்கூடாது. இது நீதிமன்றத்துக்கு எதிராக திரும்பிவிடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us