/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விஷ முறிவு மருந்து கலெக்டர் அறிவுரை
/
விஷ முறிவு மருந்து கலெக்டர் அறிவுரை
ADDED : மே 22, 2025 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார்,ஆத்துாரில், 'உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்' நேற்று நடந்தது.
இதில், கலெக்டர் பிருந்தாதேவி, மல்லியக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம், வேளாண் கிடங்குகள், கீரிப்பட்டி திடக் கழிவு மேலாண் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பிருந்தாதேவி கூறுகையில், ''அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில், ரேபிஸ் தடுப்பூசி, பாம்புக்கடி மருந்துகள் இருப்பு வைத்திருக்க வேண்டும். மருந்து, மாத்திரைகள் இருப்பு விபரம் கேட்டறியப்பட்டது.
புதிதாக கட்டப்படும் துணை நுாலகம், திடக்கழிவு மேலாண் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது,'' என்றார். ஆத்துார் தாசில்தார் பாலாஜி உடனிருந்தார்.