/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மேட்டூர் அணை 16 கண் மதகு பகுதியில் நுண்ணுயிரி தெளிப்பு
/
மேட்டூர் அணை 16 கண் மதகு பகுதியில் நுண்ணுயிரி தெளிப்பு
மேட்டூர் அணை 16 கண் மதகு பகுதியில் நுண்ணுயிரி தெளிப்பு
மேட்டூர் அணை 16 கண் மதகு பகுதியில் நுண்ணுயிரி தெளிப்பு
ADDED : டிச 01, 2024 07:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. நேற்று அணை நீர்மட்டம், 110.37 அடியாக இருந்தது. அணையின், 16 கண் மதகு பகுதியில், அழுகிய பயிர்கள் பாசி படலமாக தேங்கி துர்நாற்றம் வீசியது. இதை அழிக்க, நீர்வளத்துறை மூலம் நாட்டு சர்க்கரையை நொதிக்க செய்து நுண்ணுயிரி தயாரித்தனர்.
இதை விசைப்படகு, பரிசலில் எடுத்துச்சென்று, 'ஸ்பிரே' மூலம் நீர்வளத்துறை ஊழியர்கள் நேற்று காலை தெளித்தனர்.
இதன்மூலம் நுண்ணுயிரிகள் வேதிவினை புரிந்து துர்நாற்றம் வீசும் பாசிபடலத்தை அழித்து விடும். வாரம் இரு நாட்கள் நுண்ணுயிரி தெளிக்கப்படும் என, நீர்வளத்துறை பொறியாளர்கள் தெரிவித்தனர்.