தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா

நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா


ADDED : ஏப் 29, 2026 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம் சேலம் நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரியில் வேலைவாய்ப்பு தினம், பணி நியமன ஆணை வழங்கும் விழா நடந்தது. அதில் சிறப்பு விருந்தினரான, சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனத்தின் கல்வி நிறுவன தொடர்பு துறைக்கு தலைமை வகிக்கும் சுசீந்திரன், சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாட்டின் முக்கியத்துவம், தொடர்ந்து கற்றலின் அவசியம் குறித்து பேசினார்.

சிறப்பு விருந்தினரான, ராக்கெட் இந்தியா நிறுவன துணைத்தலைவர் மோகன்பாபு பாலச்சந்திரன், புது பொறியியல் பட்டதாரிகள், ஒரு நிறுவனத்தில் குறைந்தது, 5 ஆண்டுகள் பணியாற்றி அந்த துறையில் நல்ல நிபுணத்துவம் பெற அறிவுறுத்தினார்.

பெங்களுரு ஹெச்.சி.எல்., நிறுவன மூத்த துணைத்தலைவர் தனசேகரன் ராதாகிருஷ்ணன், குவெஸ்ட் குளோபல் நிறுவன பல்கலை தொடர்பு துறை தலைவர் தீபக் குமார், இயந்திரவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், கட்டடவியல் மற்றும் முதுகலை மேலாண்மை துறைகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு, பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பெற்ற பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

தொடர்ந்து நாலெட்ஜ் அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், முதல்வர் விசாகவேல், பயிற்சித்துறை இயக்குனர் தங்கவேல், வேலைவாய்ப்பு துறை இயக்குனர் ராஜேந்திரன் பேசினர்.

இதில் நாலெட்ஜ் பொறியியல் கல்லுாரி அறக்கட்டளை செயலர் குமார், பொருளாளர் சுரேஷ்குமார், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us