/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆத்துார், கெங்கவல்லியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
/
ஆத்துார், கெங்கவல்லியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
ஆத்துார், கெங்கவல்லியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
ஆத்துார், கெங்கவல்லியில் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
ADDED : ஜூன் 30, 2025 03:35 AM
ஆத்துார்: ஆத்துார், கெங்கவல்லி, தலைவாசல் ஒன்றியத்தில், 2024-25ல், அதிகளவில் மாணவர் சேர்க்கை, மாணவர்கள் கற்றல் அடைவு திறன்மேம்பாடு, காலை சிற்றுண்டி பணிமேற்பார்வை, பள்ளி மானிய நிதியை நிர்வகித்தல் உள்ளிட்டவைகளில் சிறப்பாக பணி-புரிந்த, தலா, 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆத்துார், தலைவாசல், கெங்கவல்லி ஒன்றியத்தில் நடந்த விழா-வின்போது, மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி தலைமை வகித்து, ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அப்-போது, மாவட்ட கல்வி அலுவலர் கூறுகையில், 'ஆசிரியர்களின் பணியை உற்சாகப்படுத்தும் வகையில், பணிகளை சிறப்பாக மேற்கொள்ள சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது' என்றார். வட்டார கல்வி அலுவலர்கள் ஆத்துார் ஸ்ரீனிவாசன், கெங்கவல்லி அலெக்-சாண்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.