ADDED : ஜூன் 07, 2026 05:03 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்,:தலைவாசலை சேர்ந்தவர் பாபு, 45. இவர் மீது, மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்றது தொடர்பாக, 2025ல், போலீசார் வழக்குப்பதிந்தனர். இந்த வழக்கில், ஆத்துார் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், 8 மாதங்களாக ஆஜராகாமல் இருந்தார்.
அதேபோல் சார்வாய்புதுாரை சேர்ந்தவர் ராமஜெயம், 45. இவர் மீது ஆத்துார் விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு உள்ளது. இந்த வழக்கில் ஆஜராகாமல் இருந்தார். மேலும் புனல்வாசலை சேர்ந்தவர் சின்னையன், 23. இவர் மீது, 2023ல், 'போக்சோ' வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் சேலம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த, 3 பேருக்கும், பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று, தலைவாசல் போலீசார், 3 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
