/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
செந்தில் பப்ளிக் பள்ளியில் கலைவிழா கொண்டாட்டம்
/
செந்தில் பப்ளிக் பள்ளியில் கலைவிழா கொண்டாட்டம்
ADDED : நவ 03, 2025 02:15 AM
சேலம்:சேலம், செந்தில் பப்ளிக் பள்ளியில், 'வைப்ரான்ஸ் 25 - அன்லீஷ் தி ஸ்பார்க் வித்இன்' பெயரில், கலைவிழா, கடந்த அக்., 31ல் கொண்டாடப்பட்டது. அதில், 3 முதல், 5ம் வகுப்பு மாணவர்கள், நடனம், பாடல், நாடகம் உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் திறமைகளை வெளிப்படுத்தினர்.
அதில் சேலம் மாநகர போலீஸ் துணை கமிஷனர் கீதா பேசுகையில், ''கல்வி அறிவை வழங்குவது மட்டுமின்றி நல்லொழுக்கமும் பொறுப்புணர்வும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்குவதில், இப்பள்ளி முக்கிய பங்காற்றுகிறது,'' என்றார். தொடர்ந்து கல்வி, விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
பள்ளி நிர்வாக உறுப்பினர்களான, தலைவர் செந்தில் சி.கந்தசாமி, துணைத்தலைவர் மணிமேகலை, செயலர் தனசேகரன், தாளாளர் தீப்தி, தலைமை நிர்வாக அதிகாரி சுந்தரேசன், முதன்மை முதல்வர் சீனிவாசன், முதல்வர் மனோகரன், துணை முதல்வர் நளினி, நிர்வாக அலுவலர் பிரவீன்குமார், கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மீரா, தேன்மொழி கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

