/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ேஹாலிகிராஸில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் ஆய்வுக்கூடம் திறப்பு
/
ேஹாலிகிராஸில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் ஆய்வுக்கூடம் திறப்பு
ேஹாலிகிராஸில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் ஆய்வுக்கூடம் திறப்பு
ேஹாலிகிராஸில் செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் ஆய்வுக்கூடம் திறப்பு
ADDED : ஜூலை 22, 2025 01:27 AM
சேலம், சேலம், அம்மாப்பேட்டை ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு அதிநவீன தொழில்நுட்பக் கல்வியை பயிற்றுவிக்கும் விதமாக, செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆய்வுக்கூடம் திறப்பு விழா நேற்று பள்ளி கலையரங்கில் நடந்தது.
சிறப்பாளராக பங்கேற்ற, நாலேட்ஜ் தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் டாக்டர் விசாகவேல் ரோபோட்டிக்ஸ் ஆய்வுக்கூடத்தை திறந்து வைத்து, மாணவர்களுக்கு ரோபோட்டிக்ஸின் வளர்ச்சியை பற்றி பேசினார். மேலும் சிறப்பாளர்களான சேலம் பிஎன்ஐ நிர்வாக இயக்குனர் கோபிநாத், உலகளாவிய ஆய்வுக்கூடத்தின் நிர்வாக துணைத்தலைவர் தங்கராஜ் ஆகியோர் செயற்கை நுண்ணறிவு மற்றும் முப்பரிமாண அச்சிடல் ஆய்வகத்தை திறந்து வைத்து பேசினர். முன்னதாக அருட்தந்தை. ஆண்டனி சாமி, புதிய ஆய்வத்தை ஆசீர்வதித்து, பள்ளிக்கு அர்ப்பணித்தார்.பள்ளி முதல்வரும், தாளாளருமான அருட்சகோதரர். சேசுராஜ், வருங்கால இளைய சமுதாய மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோட்டிக்ஸ் வளர்ச்சி பற்றியும் அறிந்து கொள்ள வேண்டுமென பேசினார்.
பள்ளி நிர்வாகி அருட்சகோதரர். ஏசுதாசன், ஹோலி கிராஸ் இண்டர் நேஷனல் பள்ளி முதல்வர் அருட்
சகோதரர் ஸ்டீபன் ஆனந்ராஜ், துணை முதல்வர் குணசீலன் மற்றும் அருட்சகோதரர்கள், ஆசிரியர்கள் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.