/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சட்டசபை தேர்தல் எதிரொலி 34 இன்ஸ்பெக்டர் மாற்றம்
/
சட்டசபை தேர்தல் எதிரொலி 34 இன்ஸ்பெக்டர் மாற்றம்
ADDED : ஜன 14, 2026 07:49 AM
சேலம்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சேலம் சரகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தொடர்ந்து, 3 ஆண்டு பணியாற்றிய, 34 இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து, சேலம் டி.ஐ.ஜி., சந்தோஷ் ஹடி மணி நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்த பிரகாஷ், குலசே-கரன், நாகராஜ், சையத் சுல்தான் பாஷா, மகேஸ்வரி, நாமக்கல் மாவட்டம் ராதா, தர்மபுரி மாவட்டம் விஜயலட்சுமி ஆகியோர் சேலம் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் பாலாஜி, கமலக்கண்ணன், உமாசங்கர், தர்ம-புரி வசந்தா, கிருஷ்ணகிரி இளவரசன், சரவணன் ஆகியோர், நாமக்கல் மாவட்டத்துக்கும் மாற்றப்பட்டனர்.
நாமக்கல் வேடப்பிறவி, மகாலட்சுமி, அம்பிகா, சேலம் பாரதி-மோகன், வளர்மதி, தனலட்சுமி, செல்வராஜ், கிருஷ்ணகிரி சிரஞ்-சீவிகுமார் ஆகியோர் தர்மபுரி மாவட்டத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் தொல்காப்பியன், சுப்ரமணியன், அங்கப்பன், மெட்-டில்டா ஜோசி, கந்தவேல், சண்முகம், அம்சவள்ளி, உமாப்ரியா, அழகுராணி, வளர்மதி, நாமக்கல் சங்கரபாண்டியன், தர்மபுரி லதா, வான்மதி ஆகியோர் கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

