தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சட்டசபை தேர்தல் பணி: அலுவலர்களுக்கு பயிற்சி

சட்டசபை தேர்தல் பணி: அலுவலர்களுக்கு பயிற்சி

சட்டசபை தேர்தல் பணி: அலுவலர்களுக்கு பயிற்சி


ADDED : மார் 04, 2026 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 07:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம் கலெக்டர் அலுவலகத்தில், 2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக, 2 நாள் பயிற்சி வகுப்பு, மண்டல அளவில் நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.

வேட்புமனு தாக்கல் நடைமுறைகள் தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜா, துணை கலெக்டர் கோவிந்தன் எடுத்துரைத்தனர். தேர்தல் திட்டமிடல், செயல்பாடு தொடர்பாக, கிருஷ்ணகிரி சிப்காட் தனி அலுவலர் ேஷக்ஆயுப், சேலம் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் சின்னசாமி; தேர்தல் நடத்தை விதிகள், தேர்தல் செலவின கண்காணிப்பு, ஊடக கண்காணிப்பு தொடர்பாக, கிருஷ்ணகிரி கலெக்டரின் நேர்முக உதவியாளர் மாதையன், சேலம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் பூவண்ணன் எடுத்து-ரைத்தனர்.

சேலம், தர்மபுரி, திருப்பத்துார், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்-டங்களை சேர்ந்த, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலு-வலர்கள், மாவட்ட அளவில் பயிற்றுனர்கள் பங்கேற்றனர். இன்றும் பயிற்சி நடக்கிறது.

சங்ககிரி போலீசார்சங்ககிரி சப் - டிவிஷனுக்கு உட்பட்ட சங்ககிரி, மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், தேவூர், இடைப்பாடி, பூலாம்பட்டி, சங்ககிரி மகளிர் என, 7 போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரியும், 123 போலீசாருக்கு, சங்ககிரியில் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் தேர்தல் நேரத்தில் போலீசார் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என, எஸ்.பி., கவுதம் கோயல் அறிவுரை வழங்கினார். சங்ககிரி டி.எஸ்.பி., தனசேகரன் பங்கேற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us