ADDED : ஜூலை 19, 2026 06:04 AM

அ நிறம் | அளவு
சேலம்:சேலம்
பாரா விளையாட்டு சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான
ஜூனியர், சப் - ஜூனியர் தடகள போட்டி, காந்தி மைதானத்தில் மாவட்ட அளவில் நடந்தது.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்
கண்மணிதேவி தொடங்கி வைத்தார். 100, 200 மீ., ஓட்டம், குண்டு எறிதல்
உள்ளிட்ட பல்வகை போட்டிகளில் வீரர், வீராங்கனைகள்,
தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு
பதக்கம், கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டன. இவர்கள், மாநில
போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். விழாவில் பாரா விளையாட்டு சங்க
செயலர் ராஜேந்திரன், ஜென்னிஸ் கல்வி அறக்கட்டளை தலைவர் கர்லின் எபி,
ரோட்டரி கிளப் ஆப் சேலம் டிவைன் ஹாட்ஸ் செயலர் ஜாகீர் உசேன் உள்பட பலர்
பங்கேற்றனர்.
