/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலி நகை அடகு வைத்து ரூ.41 லட்சம் மோசடி; ஆத்துார் நகை மதிப்பீட்டாளர் கைது
/
போலி நகை அடகு வைத்து ரூ.41 லட்சம் மோசடி; ஆத்துார் நகை மதிப்பீட்டாளர் கைது
போலி நகை அடகு வைத்து ரூ.41 லட்சம் மோசடி; ஆத்துார் நகை மதிப்பீட்டாளர் கைது
போலி நகை அடகு வைத்து ரூ.41 லட்சம் மோசடி; ஆத்துார் நகை மதிப்பீட்டாளர் கைது
ADDED : ஜன 28, 2025 07:16 AM
கெங்கவல்லி: கெங்கவல்லியில் உள்ள வங்கியில், போலி நகையை அடகு வைத்து, 41 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், நகை மதிப்பீட்டாளரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் கனரா வங்கி உள்ளது. இங்கு கூடமலை கிராமத்தை சேர்ந்த சேகர், பழனிசாமி ஆகியோர் கடந்த, 6, 7, 8, 21 ஆகிய தேதிகளில், 84 பவுன் நகையை அடகு வைத்து, 41 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். கடந்த, 24ல், நகை மதிப்பீட்டு ஆய்வு குழுவினர் செந்தில், சரவணன் ஆகியோர் வங்கியில் ஆய்வு செய்தனர். அப்போது, போலியாக, 84 பவுன் கவரிங் நகை (தங்க முலாம் பூசிய நகை) இருந்தது தெரியவந்தது. இரு தினங்களுக்கு முன், 12.17 லட்சம் ரூபாயை நகைக்கு வழங்கிய தொகையை, வங்கி நிர்வாகம் வசூல் செய்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஆத்துார், ராஜாஜி காலனியை சேர்ந்த பாலச்சந்தர், 45, என்பவர், நகை மதிப்பீடு செய்யாமலும், போலி நகையை வங்கியில் அடகு வைப்பதற்கு அனுமதித்துள்ளதும் தெரியவந்தது. இது குறித்து, வங்கி மேலாளர் மித்ராதேவி அளித்த புகாரில், தம்மம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, நகை மதிப்பீட்டாளர் பாலச்சந்தரை கைது செய்தனர்.
இதுபற்றி, போலீசார் கூறுகையில், 'கெங்கவல்லியில் உள்ள வங்கியில், 1,300 பாக்கெட்டுகளில் இருந்த நகை தரம் குறித்து, வங்கி நகை மதிப்பீட்டு குழு ஆய்வு செய்தது. அதில், 84 பவுன் போலி நகைக்கு, 41 லட்சம் ரூபாய் வழங்கி மோசடி செய்த, வங்கி நகை மதிப்பீட்டாளர் மீது, வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்துள்ளோம். இவர் மீது, வேறு ஒரு கிளையில் மோசடி செய்ததாகவும் புகார் உள்ளது. வங்கியில் நகை வைத்த இருவரிடம், விசாரணை செய்யப்படும்,' என்றனர்.