/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நிலப்பிரச்னையில் தாக்குதல் 4 பேர் தீக்குளிக்க முயற்சி
/
நிலப்பிரச்னையில் தாக்குதல் 4 பேர் தீக்குளிக்க முயற்சி
நிலப்பிரச்னையில் தாக்குதல் 4 பேர் தீக்குளிக்க முயற்சி
நிலப்பிரச்னையில் தாக்குதல் 4 பேர் தீக்குளிக்க முயற்சி
ADDED : டிச 30, 2025 01:28 AM
சேலம்: தாரமங்கலத்தை சேர்ந்த விவசாயி வெள்ளையப்பன், 67. இவர், மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர், 11 பேருடன் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தார்.
தொடர்ந்து, அவர், அவருடன் வந்த காவியாஞ்சலி, 25, கலா, 30, பேத்தி காவியா என, 4 பேர், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்கு-ளிக்க முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்-களை தடுத்து மீட்டு முதலுதவி அளித்தனர்.
பின் அவர்கள் கூறியதாவது: வெள்ளையப்பனுக்கு பாத்தியப்-பட்ட நிலத்தில் விவசாயம் செய்கிறோம். அவரது உறவினர்கள், பாகப்பிரிவினையின்போது கூடுதல் நிலம் கேட்டு பிரச்னை செய்-வதோடு, ஒரு பகுதி நிலத்தை ஆக்கிரமித்துக்கொண்டனர்.
இதுதொடர்பாக நடந்த தகராறில், வெள்ளையப்பனின் மகன் மணிகண்டன், 30, தாக்கப்பட்டு, ஓமலுார் அரசு மருத்துவமனையில் உள்ளார். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இதையடுத்து சேலம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

