தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஜாமின் கையெழுத்து போட்டவர் மீது தாக்குதல்

ஜாமின் கையெழுத்து போட்டவர் மீது தாக்குதல்

ஜாமின் கையெழுத்து போட்டவர் மீது தாக்குதல்


ADDED : அக் 11, 2026 04:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2026 04:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம், அஸ்தம்பட்டி, சின்னப்புத்துாரை சேர்ந்தவர் செந்தில், 48. இவர், சுற்றுலா அழைத்து செல்லும் அலுவலகம் நடத்தி வருகிறார். இவரது நண்பர் அங்கம்மாள் காலனியை சேர்ந்த வசந்த். இவர், தனியார் நிதி நிறுவனத்தில் பெற்ற, 3.5 லட்ச ரூபாய் கடனுக்கு, செந்தில் ஜாமின் கையெழுத்து போட்டுள்ளார்.

இந்நிலையில் கடனுக்கான, 4 தவணைத்தொகையை வசந்த் செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதை செந்தில் கேட்டபோது ஏற்பட்ட தகராறில், அவரை சரமாரியாக வசந்த் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த செந்தில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகார் தொடர்பாக, அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us