ADDED : டிச 29, 2025 09:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: காடையாம்பட்டி, பண்ணப்பட்டியை சேர்ந்தவர் மணி, 59. அதே பகுதியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பூசாரியாக உள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு, கோவிலில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டு, உண்டியலை உடைக்க முயற்சி நடந்தது.
இதை கவனித்த மணி, உறவினர்களை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றதும், மர்ம நபர்கள் பைக்கில் தப்பினர். இதுகுறித்து மணி புகார்படி, தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

