/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2 யானை தந்தங்களை ரூ.1.50 கோடிக்கு விற்க முயற்சி; 3 தரகர்கள் கைது; மேலும் சிலருக்கு வலை

ADDED : ஆக 15, 2024 07:15 AM
மேட்டூர்: இரு யானை தந்தங்களை, 1.50 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற விவகாரத்தில், 3 தரகர்களை கைது செய்த வனத்துறையினர், மேலும் சிலரை தேடுகின்றனர்.தமிழக வனக்குற்ற தடுப்பு பிரிவு தகவல்படி சேலம், மேட்டூர் வனத்துறையினர் நேற்று முன்தினம், மேச்சேரி, தெத்திகிரிப்பட்டியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தொப்பூரில் இருந்து இரு பைக், ஒரு மொபட்டில் வந்தவர்களை நிறுத்தி விசாரித்தனர். அதில் யானைகளின் இரு தந்தங்களை விற்க முயன்றது தெரிந்தது. தந்தங்களை பறிமுதல் செய்த வனத்துறையினர், அதை விற்க முயன்ற தர்மபுரி மாவட்டம் பொம்மிடி சேகர், 26, பாப்பிரெட்டிப்பட்டி, பையர்நத்தம் சோமசுந்தரம், 42, சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், மேட்டுப்பட்டி தாதனுார் பாலு, 40, ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: சிலர் தலைமறைவாக உள்ளனர். அதில் மேச்சேரி, திமிரிக்கோட்டையை சேர்ந்த சரவணனுக்கு, கேரள, கர்நாடக மாநிலங்களில் தந்தங்களை வாங்கும் ஆட்களுடன் தொடர்பு உள்ளதாக தெரிகிறது. இரு தந்தங்களை, 1.50 கோடி ரூபாய்க்கு சரவணன் உள்ளிட்ட கும்பல் விலை பேசி விற்க முயன்றது தெரியவந்துள்ளது. இதில் பிடிபட்டவர்கள், தரகர்களாக செயல்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.