/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆயுதப்படை மைதானத்தில் வரும் 15ல் வாகனங்கள் ஏலம்
/
ஆயுதப்படை மைதானத்தில் வரும் 15ல் வாகனங்கள் ஏலம்
ADDED : அக் 08, 2024 03:36 AM
ஓமலுார்: சேலம் மாவட்ட காவல்துறை சார்பில், வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: சேலம் மாவட்டத்தில் மது-விலக்கு வழக்குகளில் சிக்கிய, 2 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 98 டூவீலர்கள் வரும், 15ம் தேதி காலை, 10:00 மணிக்கு சேலம் ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படு-கிறது. இந்த வாகனங்களை, 11ம் தேதி முதல் பார்வையிடலாம்.
ஏலம் எடுக்க விரும்பு வோர் டூவீலர்களுக்கு, 5,000 ரூபாய், நான்கு சக்கர வாகனங்களுக்கு, 10 ஆயிரம் ரூபாய் முன் பணமாக வரும், 13 காலை, 10:00 மணி முதல், 14ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் ஆயுதப்படை மைதானத்தில் செலுத்தி ரசிது பெற்று கொள்ளலாம். முன் பணம் செலுத்தியவர்கள் மட்டுமே, 15ம் தேதி ஏலத்தில் கலந்து கொள்ள முடியும்.ஏலம் எடுத்தவுடன், ஏலத்தொகை மற்றும் அதற்குண்டான ஜி.எஸ்.டி., தொகை முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்று கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு, ஆத்துாரில் உள்ள மதுவிலக்கு அமல் பிரிவு, காவல் துணை கண்காணிப்-பாளர் அலுவலகத்தை நேரிலோ அல்லது போனில் (0422 82243333), 94981 06539 என்ற எண்களில் தொடர்பு கொள்-ளவும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.