sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பர்கூர் பள்ளி மாணவி கூட்டு பலாத்கார விவகாரம் ஹெச்.எம்., ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரணை

/

பர்கூர் பள்ளி மாணவி கூட்டு பலாத்கார விவகாரம் ஹெச்.எம்., ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரணை

பர்கூர் பள்ளி மாணவி கூட்டு பலாத்கார விவகாரம் ஹெச்.எம்., ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரணை

பர்கூர் பள்ளி மாணவி கூட்டு பலாத்கார விவகாரம் ஹெச்.எம்., ஆசிரியர்களிடம் அதிகாரிகள் விசாரணை


ADDED : பிப் 07, 2025 04:13 AM

Google News

ADDED : பிப் 07, 2025 04:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 8ம் வகுப்பு மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, அதே பள்ளி ஆசிரியர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். பள்ளிக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், மற்ற ஆசிரியர்களிடம், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், போச்சம்பள்ளி அருகே கிராமத்தில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளியில், 75 மாணவியர் உட்பட, 140 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்-ளியில், 8ம் வகுப்பு படிக்கும், 13 வயது மாணவி கடந்த ஒரு மாதமாக பள்ளிக்கு வரவில்லை. விசாரணையில், அதே பள்-ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆறுமுகம், 48, சின்னசாமி, 57, பிரகாஷ், 37, ஆகியோர் கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்-தது.தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில், நேற்று முன்தினம் குற்றம் சாட்டப்பட்ட, 3 ஆசிரியர்களையும், பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர். ஆசிரியர்களை கண்டித்து அப்பகுதியில் உள்ளோர், 2 இடங்களில் சாலைமறி-யலில் ஈடுபட்டனர். கைதான ஆசிரியர்கள் மூவரையும், 'சஸ்பெண்ட்' செய்து, சி.இ.ஓ., முனிராஜ் உத்தரவிட்டார். நேற்று அப்பள்ளிக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது.

பள்ளி முன் ஆர்ப்பாட்டங்கள், கூட்டம் சேர்வதை தவிர்க்க, பர்கூர் டி.எஸ்.பி., முத்துகிருஷ்ணன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். சம்பந்தப்பட்ட பள்-ளியில் ஒரு தலைமை ஆசிரியை, 4 ஆசிரியைகள், 3 ஆசிரியர்கள் உட்பட, 8 பேர் பணிபுரிகின்றனர். இதில், 3 ஆசிரியர்கள் கைதான நிலையில், பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகளிடம், அரசு துவக்கப்பள்ளி இணை இயக்-குனர் சாந்தி மற்றும் கல்வி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பள்ளி திறந்தவுடன், அனைத்து மாணவர்களுக்கும் கவுன்சிலிங் கொடுக்க

ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பள்ளி மாணவி பலாத்காரம் சம்பவத்திற்கு எதிர்-கட்சி தலைவர் இ.பி.எஸ்., உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க., சார்பில் நாளை கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

ஆஜராக மாட்டோம்

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டம், மாவட்ட தலைவர் கோவிந்தராஜிலு தலைமையில் நேற்று நடந்தது.

இதில், பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்ப-வத்தை கண்டித்தும், இந்த வழக்கில் கைதான, 3 ஆசிரியர்

களுக்கு ஆதரவாக, நீதிமன்ற வழக்கு

களில் ஜாமின் மனு மீது அல்லது வழக்குகளில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக போவதில்லை என, தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. மேலும், கைதான ஆசிரியர்கள் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில், நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு, அரசு உரிய நிவாரணம் வழங்க, தீர்மானம் நிறை-வேற்றப்பட்டது.

சங்க செயலாளர் சக்தி நாராயணன், துணைத்தலைவர்கள் குமார-சாமி, கலையரசி, இணை செயலாளர் சிவசக்தி குமரன், நுாலகர் பாரூக் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

'60 நாளில் தண்டனை வழங்க வேண்டும்'

கிருஷ்ணகிரியில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த, த.வா.க., தலைவர் வேல்முருகன்

நிருபர்களிடம் கூறியதாவது:அரசு பள்ளி மாணவி கூட்டு பலாத்கா-ரத்தில், அப்பள்ளியில் பணிபுரியும், 3 ஆசிரியர்களே ஈடுபட்ட-தாக கூறுவது அதிர்ச்சியளிக்கிறது. ஒழுக்கத்தையும், நேர்மை-யையும் போதிக்கும் ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு, இது-போன்ற செயலில் ஈடுபட்டவர்களை ஏற்க முடியாது. இது குறித்து ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் ஆசீர்வாதத்திடம் பேசினேன். பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு ஆயுள் தண்ட-னையும், இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவோருக்கு துாக்கு தண்டனையும் அளிக்க வேண்டும். இவர்களை, போக்-சோவில் மட்டுமல்ல, குண்டர் சட்டத்திலும் கைது செய்ய வேண்டும். அதேபோல வழக்கு விசாரணையை ஆண்டுக்க-ணக்கில் இழுக்காமல், 60 நாட்களில் முடித்து தீர்ப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us