/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அன்னபூரணா பொறியியல் கல்லுாரிக்கு குறுகிய காலத்தில் தன்னாட்சி அங்கீகாரம்'
/
'அன்னபூரணா பொறியியல் கல்லுாரிக்கு குறுகிய காலத்தில் தன்னாட்சி அங்கீகாரம்'
'அன்னபூரணா பொறியியல் கல்லுாரிக்கு குறுகிய காலத்தில் தன்னாட்சி அங்கீகாரம்'
'அன்னபூரணா பொறியியல் கல்லுாரிக்கு குறுகிய காலத்தில் தன்னாட்சி அங்கீகாரம்'
ADDED : மே 31, 2024 03:05 AM
சேலம்: சேலம், அன்னபூரணா பொறியியல் கல்லுாரியில் ஆட்டோமொபைல் பொறியியல், பயோ மெடிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் உள்பட, 9 இளங்கலை பட்டப்படிப்புகள், கணினி அறிவியல், பவர் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய முதுகலை பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
இதுகுறித்து கல்லுாரி துணைத்தலைவர் சந்திரசேகர், முதல்வர் அன்புசெழியன் கூறியதாவது:
பொறியியல் கல்வி என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனி என்ற நிலையை மாற்றுவதோடு, ஆற்றல் மிக்க மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம். சர்வதேச தரத்தில் உயர்கல்வி அளிக்கும் எங்கள் கல்லுாரிக்கு, 'ஏ' கிரேடு தரச்சான்றிதழை, 'நாக்' கமிட்டி வழங்கியுள்ளது. கல்லுாரியில் படிக்கும், 95 சதவீத மாணவர்கள் பன்னாட்டு வேலை நிறுவனங்களில் பணிகளை பெற்றுள்ளனர். எங்கள் கல்லுாரி குறுகிய காலத்தில் தன்னாட்சி அங்கீகாரம் பெற்றும் சாதனை படைத்துள்ளது. சிறந்த மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையம், சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில், முதல்முறையாக எங்கள் கல்லுாரியில் மட்டும் உள்ளது.இங்கு படிக்கும் மாணவர்களில், 90 முதல், 95 சதவீதம் பேர், வேலைவாய்ப்பு பெற்று டி.சி.எஸ்., வி -டெக்னாலஜிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில், 4 லட்சம் முதல், 12 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் பெறுகின்றனர். இவ்வாறு கூறினர்.