/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விநாயகா மிஷன் விம்ஸ் வளாகத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு விருது

ADDED : ஏப் 07, 2025 02:27 AM
சேலம்: 'கிரீன்வியோ சொல்யூஷன்' என்பது சுற்றுச்சூழல் மேம்பாட்டில் கவனம் செலுத்தும் ஒரு முன்னணி அமைப்பு. இந்த அமைப்பு சார்பில், சமீபத்தில் நடத்திய விழாவில், விநாயகா மிஷன் பல்க-லையின், விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரிக்கு, முதன்மை விருதான சாம்பியன் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து அதே
கல்லுாரி டீன், சுற்றுச்சூழல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்க-ளுக்கு, சமூகத்தில் சுற்றுச்சூழல் தாக்கத்திற்கான பிரிவில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அக்கல்லுாரி டீன் செந்தில்குமார் கூறுகையில், ''கல்லுாரி மூலம் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்-பட்டுள்ளன. நீர்
நிலைகளை பாதுகாத்தல் குறித்த விழிப்புணர்வு, கல்லுாரி மூலம் தத்தெடுத்த கிராமங்களில் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கான வழிவ-கைகள் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இதை அடிப்படையாக வைத்து, எங்கள் கல்லுாரிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.
விருதுகளை
பெற்றதால், பல்கலை வேந்தர் கணேசன், துணைத்தலைவர் அனு-ராதா ஆகியோர், டீன் உள்ளிட்ட அனைவரையும் பாராட்டினர்.