ADDED : பிப் 08, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி: கிருஷ்ணகிரி மாவட்டம், பையூர் தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவியர், சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் தங்கி, கிராமப்புற தோட்டக்கலை விவசாய பணி அனுபவ பயிற்சி பெற்று வருகின்றனர்.
குரால்-நத்தம் கிராமத்தில் தேனீ வளர்ப்பு குறித்து விவசா-யிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம், தேன் தேவை குறித்து விளக்கினர். கம்மாளப்பட்டி கிராமத்தில் மண் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்-தினர். வரைபடம் மூலம் வேளாண் மேம்பாட்டிற்-கான பங்கேற்பு, கிராமப்புற மதிப்பீடு நுட்பங்கள் குறித்துமாணவியர் விளக்கினர்.
