ADDED : ஆக 11, 2025 08:22 AM
சேலம்: அகில இந்திய காப்பீடு கழக, 36வது தென் மண்டல மாநாடு, சேலத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2ம் நாள் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, காந்தி மைதானத்தில், மாரத்தான் போட்டி நேற்று நடத்தப்பட்டது.
'வளமான எல்.ஐ.சி., வலிமையான இந்தியா' தலைப்பில் நடந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச்செயலர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா, முன்னாள் தலைவர் அமானுல்லா கான், முன்னாள் பொதுச்செயலர் வேணுகோபால் தொடங்கி வைத்தனர்.
அதில், 10 முதல், 17 வயது வரை, ஆண், பெண் முறையே போட்டி தனித்தனியே, 4 சுற்றுகளாக நடந்தது. காந்தி மைதானத்தில் தொடங்கி அஸ்தம்பட்டி சந்திப்பு வரை சென்று, மீண்டும் காந்தி மைதானத்தை அடைந்தது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர், மக்களுக்கு, 1.10 லட்சம் ரூபாய் மதிப்பில் பரிசு கள் வழங்கப்பட்டன. சங்க இணை செயலர் கிரிஜா உள்பட கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். இன்றுடன், 3 நாள் மாநாடு நிறைவு பெறுகிறது.
