/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஊழல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
/
ஊழல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 31, 2025 12:53 AM
ஆத்துார், சென்னை, மணலியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ், தமிழக அரசு அனைத்து துறைகள் இணைந்து, ஆத்துார், கல்பகனுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று, ஊழல் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம், பேரணியை நடத்தின. ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணி தலைமை வகித்தார்.
பள்ளி மாணவ, மாணவியர், 'லஞ்சம் தராதே, லஞ்சம் வாங்காதே; ஊழல் இல்லா சமுதாயம் நம் நோக்கம்; ஊழலை ஒழித்து சமுதாயத்தை காப்போம்' உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, கொத்தாம்பாடி சாலை வரை பேரணியாக சென்றனர்.
தொடர்ந்து வினாடி - வினா, படம் வரைதல், ரங்கோலி, பேச்சுப்போட்டி உள்ளிட்டவை நடத்தி, மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கினர். ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

