/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு ஊர்வலம்
/
மஞ்சப்பை பயன்படுத்த விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 26, 2025 03:48 AM
இடைப்பாடி: பிளாஸ்டிக் பை உபயோகத்தை நீக்கி, மீண்டும் மஞ்சப்பை பயன்-படுத்துவதை ஊக்கப்படுத்த, இடைப்பாடி நகராட்சி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி, நகராட்சி சார்பில் ஊர்வலம் நேற்று நடந்தது.
நகராட்சி கமிஷனர் கோபிநாத் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் பாஷா தொடங்கிவைத்தார். இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் தொடங்கிய ஊர்வலம், பவானி சாலை வழியே வந்து, மீண்டும் பஸ் ஸ்டாண்டில் முடிந்தது. சுகாதார
அலுவலர் முருகன், சுகாதார ஆய்வாளர் தங்கவேல், 200க்கும் மேற்பட்ட மாணவியர், துாய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.
துணிப்பை வழங்கல்
ஆட்டையாம்பட்டி டவுன் பஞ்சாயத்து சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. சேலம் மண்டல டவுன் பஞ்சாயத்து இயக்குனர் குருராஜன் தலைமையில், டவுன் பஞ்சாயத்து தலைவர் முருகபிரகாஷ், செயல் அலுவலர் மேக-நாதன்(பொ) உள்ளிட்ட அலுவலர்கள், துாய்மை பணியாளர்கள், மாணவர்கள், முக்கிய வீதிகள் வழியே பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அப்போது மக்களுக்கு இலவசமாக துணிப்பைகளை வழங்கினர். அதேபோல் இளம்பிள்ளை டவுன் பஞ்சாயத்து சார்பில், விழிப்பு-ணர்வு பேரணி நடந்தது.
அதேபோல் தாரமங்கலம் நகராட்சி சார்பில், பாலிதீன் பயன்-பாட்டை தடுக்க விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. நகராட்சி தலைவர் குணசேகரன், கமிஷனர் காஞ்சனா, துப்புரவு ஆய்வாளர் பிரின்ஸ் சகாயராஜ், பணியாளர்கள் பங்கேற்றனர்.