/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அய்யனாரப்பன் ஊர்வலம் திரளான பக்தர்கள் தரிசனம்
/
அய்யனாரப்பன் ஊர்வலம் திரளான பக்தர்கள் தரிசனம்
ADDED : மே 15, 2025 01:27 AM
இடைப்பாடி, இடைப்பாடி அருகே வேம்பனேரி அய்யனாரப்பன் கோவில், சுற்றுப்பகுதியில் உள்ள கருப்பன் தெரு, சின்ன முத்தியம்பட்டி, பெரிய முத்தியம்பட்டி, காட்டூர், புதுப்பாளையம் உள்பட, 7 ஊர்களை சேர்ந்த 36 குக்கிராமங்களுக்கு சொந்தமானது. இச்சுவாமியை, சித்திரை, வைகாசியில், 7 ஊர்களுக்கும் ஊர்வலமாக துாக்கிச்செல்வர்.
அதன்படி நேற்று, சுவாமிக்கு தங்க கீரிடம் அணிவித்து குதிரை வாகனத்தில் அமரவைத்து ஊர்வலம் தொடங்கியது.
முதல் நாளில், ஏராளமான வாலிபர்கள், கருப்பன் தெரு, சின்ன முத்தியம்பட்டி, பெரிய முத்தியம்பட்டி பகுதிகளில் சுவாமியை துாக்கிச்சென்றனர். வழிநெடுக பக்தர்கள் வழிபட்டனர். மேலும் கோவிலில் ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். நாளை வரை ஊர்வலம் நடக்கிறது.