/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பாபர் மசூதி இடிப்பு தினம்; ரயில்களில் சோதனை
/
பாபர் மசூதி இடிப்பு தினம்; ரயில்களில் சோதனை
ADDED : டிச 06, 2024 07:19 AM
சேலம்: பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று, வெடிகுண்டு சோதனையில் ரயில்வே போலீசார் ஈடுபட்டனர்.
இன்ஸ்பெக்டர் ரத்ன குமார் தலைமையில் போலீசார், மெட்டல் டிடெக்டர் கருவியுடன், சேலம் வழியே சென்ற ஓஹா - ராமேஸ்வரம், சென்னை - கோவை, நியூடில்லி - திருவனந்தபுரம் கேரள எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி - திப்ரூகர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சோதனை நடத்தினர். ரயில் பெட்டிகள், பயணியரின் உடைமைகள், கழிப்பறை பகுதிகளில் அடுத்தடுத்து சோதனை நடந்தன. அதேபோல் ரயிலுக்கு காத்திருந்த பயணியர், ரயில்வே பார்சல் பிரிவில் உள்ள பண்டல்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. நாளை வரை சோதனை தொடரும் என, போலீசார் தெரிவித்தனர்.